Case study
குருசடை தீவு.............
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் பஞ்சாயத்திற்குட்பட்டது அக்காள்மடம் கிராமம். இக்கிராமத்தில் மீன்பிடிமற்றும்மல்லிகை செடி வளர்த்தல் ஆகிய தொழில்களை பிரதான தொழிலாக செய்கிறார்கள்.
சுமார் 1500 வருடத்திற்கு முன்பு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டது.இந்த சீற்ற்த்திற்கு பிறகு பாம்பனிலிருந்து மண்டபம் வரை ஒரே மேடான நிலப்பரப்பாக இருந்த பகுதி சரிசமமாக காணப்பட்டது. அதற்கு பிறகுதான் தீவுகள் உருவானது. குருசடை தீவில்தான் இவர்களது வாழ்வாதாரமே அடங்கியுள்ளது. இத்தீவு பாம்பனிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த தீவில் ஒரே செல்லிலான உயிரினம் ஒன்று உள்ளது. இந்த உயிரினத்தின் பெயர் பெலனோகுளோசஸ் ஆகும். இவ்வுயிரினம் மீன் போன்று சிரியதாக இருக்கும். மண்ணுக்குள் அடியில் குழி தொண்டி புதைந்து விடப்பட்டிரும். இவ்வுயிரினத்தை ஆராய்சி செய்வதற்காக வடநாட்டிலிருந்து மருத்துவ கல்லூரியிலிருந்து வருவார்கள். இந்த மாணவர்களை அழைத்து வருவது மண்டபம் மிராசு மரைக்காயர் ஆவார். இவர் கப்பல் துறையில் மிகவும் உயர்வான பணியில் இருப்பார். இந்த குருசடை தீவில் சர்ஜ் ஒன்று உள்ளது. 1964 ல் ஏற்பட்ட தனுஷ்கோடி புயலால் இந்த கோவில் அழிந்துவிட்டது. இந்த கோவிலின் கோபுரத்தில் சிலுவை இருந்தது.சிலுவை என்றால் குரூஸ் அதனால்தான் இந்த தீவிற்கு இப்பெயர் தோன்றியது.
இந்த குருசடை தீவில் ஒரு வாரம் வரை தங்கியிருந்து மீன் பிடித்து செல்வார்கள். பாசி எடுப்பவர்கள் அங்கேயே தங்கியிருந்து பாசியை காயவைத்து விற்பனைக்கு எடுத்து செல்வார்கள். இத்தீவிலிருந்து 50 அடி தூரத்தில் பவளப்பாறைகள் உள்ளன. விரல் வடிவ பாறைகள் கரை பகுதியில் உடைந்து ஒதுங்கும். அப்போது பவளப்பாறையின் அருமை தெரியவில்லை .விரல் வடிவமுள்ள பாரைகளில் இருந்து நீர் போன்ற திரவம் வரும். இவற்றை மெடிசனுக்கு பயன்படுத்துகிறார்கள்.
பவளப்பாறைகள் அழிவதால் மீன் இனமே அழிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இரட்டை மடியினால் மீன் இனம் அழிந்து மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.............
